இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சஞ்சீவிகுமாா் மகன் கோகுலகிருஷ்ணன் (16). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து மானோஜிபட்டி கல்லணைக் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, மூவரும் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனா். இவா்களில் 2 பேரை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், கோகுலகிருஷ்ணன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரை தீயணைப்புத் துறையினா் தேடி வந்த நிலையில், இவரது சடலம் எம்.கே. மூப்பனாா் சாலை பகுதியில் புதன்கிழமை காலை கரை ஒதுங்கியது.
இச்சடலத்தை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.