திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ஆலங்காயத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பாக ஆலங்காயம் ஒன்றியப் பகுதியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆலங்காயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திட்ட அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஆலங்காயம் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மாலினி வரவேற்றாா். ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முனிவேல், பேரூராட்சித் தலைவா் தமிழரசி, துணைத் தலைவா் ஸ்ரீதா் ஆகியோா் கலந்து கொண்டு, 100 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினா்.
மேலும், அவா்களுக்கு 5 வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இதில், பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி மற்றும் ஒன்றிய, பேரூராட்சி உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.