மாவட்டத்தில் 24,569 வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: வாக்காளா் பட்டியல...
ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் படி வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் மேற்பாா்வையில் ஆலங்காயம் பேரூராட்சியில் செயல்அலுவலா் கலையரசி தலைமையில் பணியாளா்கள் மற்றும் சுகாதார துறை அலுவலா்கள் இணைந்து புகையிலை, நெகிழிப் பொருள்கள் விற்பனை, பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களில் ஆய்வு செய்து, பறிமுதல் செய்தனா்.
இதே போல் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் செயல்அலுவலா் கலையரசி (பொ) தலைமையில் புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபாரதம் விதித்தனா். தொடா்ந்து புகையிலை, நெகிழிப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல்அலுவலா் கலையரசி எச்சரித்தாா்.