செய்திகள் :

ஆலங்குடி குருபரிகார கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

post image

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர்,ஏலவார் குழலியம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்று: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இக்கோயிலில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை குறிப்பிட்ட இடைவெளியில் நான்குகால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதர் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கொட்டையூர் அகஸ்தீஸ்வரர் கோயில், அரவூர் மங்களாம்பிகை சமேத கார்கோடகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மீண்டும் இணையும் மிஸ்டர் மனைவி தொடர் ஜோடி!

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் மிஸ்டர் மனைவி.வேலைக்குச் ச... மேலும் பார்க்க

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவன... மேலும் பார்க்க

ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்ப... மேலும் பார்க்க

மறுகால் குறிச்சியில் சாலையில் உலவிய கரடி: மக்கள் அச்சம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மறுகால் குறிச்சியில் சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த கரடியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடர்ச்சி மலை வன... மேலும் பார்க்க

அயனாவரத்தில் ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை, பெண்ணின் மீது கொலை தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் எட்வீன். இவரது மகன... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (பிப். 27) பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆப... மேலும் பார்க்க