செய்திகள் :

"ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களை பார்த்து வெட்கப்படுகிறேன்"- கொதித்த எழுத்தாளர்!

post image

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன. கேரளாவில் உடல் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்தவர் என ஆலின் ஷெரின் ஆபிரகாமை மக்கள் கொண்டாடினர். அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அரசு மரியாதையுடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆலின் ஷெரின் ஆபிரகாமின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உடல் உறுப்பு தானம் சிறப்பு மையத்துக்கு ஆலின் ஷெரின் ஆபிரகாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், "ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்" என பிரபல எழுத்தாளர் எதிரன் கதிரவன் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

எழுத்தாளர் எதிரன் கதிரவன்

இதுகுறித்து மலையாள எழுத்தாளர் எதிரன் கதிரவன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆலின் என்ற குழந்தையை கொண்டாடுவதன் மூலம் நமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மிகவும் கொடுமையானதும், மோசமான நடவடிக்கையும் ஆகும். குழந்தைகளுக்கான பேபி சீட் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லையா? நம்முடைய அலட்சியம் அந்த குழந்தையை கொன்றுவிட்டது என்பதை உணர இங்கு யாருமே இல்லையா? அந்த குழந்தையுடன் பயணித்த தாய் உள்ளிட்டவருக்கு பெரிய அளவு காயம் இல்லை. கவனமாக இருந்திருந்தால் ஆலின் ஷெரினை மரணமடையாமல் பார்த்திருக்கலாம்.

குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம்

இதே சம்பவம் வேறு நாடுகளில் நடந்திருந்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பாலா என்ற இடத்தில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஒரு சிறிய குழந்தையை மடியில் அமரவைத்து ஒருவர் கார் ஓட்டிய காட்சியை நேற்று பார்த்தேன். ஒரு சிறு நிகழ்வால் ஸ்டீயரிங் குழந்தையின் தலையில் இடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும். பேச்சுகூட வராத குழந்தைகளை வைத்து வேடிக்கை காட்டும் இவர்கள் பெற்றோர்கள்தானா? ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதி... மேலும் பார்க்க

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிந... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை ப... மேலும் பார்க்க