செய்திகள் :

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' - பொன்முடி சாடல்

post image

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். கடந்த அரசின் முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது" என்று பேசியிருந்தார்.

விஸ்வநாதனின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்...
ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன்
ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன்

"தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு,

அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.விஸ்வநாதன் “ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.

’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்".

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' - விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நய... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தவெக திருவெறும்பூர்... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

மும்பை: பக்ரீத் ஆடுகளை அகற்ற கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை; பன்றியை கொண்டு வந்த இந்து அமைப்புகள்

பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை தாங்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் பலியிடுவது வழக்கம். மும்பை மீரா ரோட... மேலும் பார்க்க

பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை: ``எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக..." - ஸ்டாலின் கண்டனம்!

கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று (மே 27, 2026) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிம மண... மேலும் பார்க்க

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' - விஸ்வநாதன்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் வ... மேலும் பார்க்க