நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
ஆளுநா் மாளிகை,எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகை மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலில், கிண்டியில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகை, ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடிகே.பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதையடுத்து ஆளுநா் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள்,மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.