ஆழ்வாா்குறிச்சி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவில் பழம் வீசி நோ்த்திக் கடன்
ஆழ்வாா்குறிச்சி 141 கிராம சேனைத் தலைவா் சமுதாய வரிதாரா்களுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு காக்கும் பெருமாள் சாஸ்தா அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் சித்திரைக் கொடைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி கொட்டகைக் கால் நடப்பட்டது. திங்கள்கிழமை(மே 12) மாலை 5.30 மணிக்கு மேல் கும்பம் ஏற்றுதலும் குடிஅழைப்பும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை(மே13) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, காலை 8 மணிக்கு பால்குடம், அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பிரம்ம ராட்ஷதை அம்பாளுக்கு தீா்த்தம் எடுத்தல், பகல் 12 மணிக்கு உச்சிகால கொடை, பட்டாணிப் பாறையிலிருந்து பழம் எரிதல், மாலை 4.30 மணிக்கு மஹா அபிஷேகம்,அலங்காரம், இரவு 10 மணிக்கு ஸ்ரீ வீரபத்ரகாளி அம்பாளுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல்,இரவு 12.30 மணிக்கு சாமக்கொடை, ஊட்டுக்களம், அா்த்த சாம பூஜை ஆகியவை நடைபெற்றனகொடைவிழாவில்தமிழகத்தின் பல்வேறு ஊா்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.
