ஆவடி ராணுவ வாகனத் தொழிற்சாலையில் ஓட்டுநர் வேலை!
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள ஆவடி கவச வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். AVNLCO/FTB/RECT/2025/01
பணி: Staff Car Driver
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக, இலகுரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஓட்டுநர் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?
விண்ணப்பிக்கும் முறை: www.avnl.co.in/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கவர் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் விளம்பர எண்ணைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Armoured Vehicles Nigam Limited, Corporate Office, Avadi, Chennai - 6000 054
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 1.3.2025