திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி
ஆஸ்கர் விருது வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்..!
ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன், அவரது மனைவி, அவரது நாய் என அனைவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மரணத்துக்கு காரணம் என்னவென்று காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாண்டா ஃபே கவுண்டி காவல்துறை ஊடகப் பிரிவினர் டெனிஸ் அவில்லா புதன்கிழமை மதியம் 1.45 மணிக்கு பக்கத்து வீட்டாரின் அழைப்பின் பேரில் சோதிக்க சென்றபோது ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா, அவர்களது வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததை உறுதி செய்துள்ளார்.
95 வயதாகும் ஜெனே ஹேக்மேன் ஹாலிவுட் சினிமாவில் மிகவும் மதிப்புமிக்க நடிகராக அறியப்பட்டு வந்தவர்.
2 ஆஸ்கர் விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிடீஷ் அகாதெமி விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2004இல் வெல்கம் டூ மூஸ்போர்ட் படத்தில் நடித்திருந்தார்.
அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது நடிப்பினை குறித்து பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
Gene Hackman dead at the age of 95. To say he was one of the great actors is an understatement -powerful, explosive & captivating on screen. Great roles in movies like The Conversation, French Connection, Royal Tenenbaums, Superman, Poseidon Adventure & more.
— Movies In Focus (@moviesinfocus) February 27, 2025
Sad, sad, sad news. pic.twitter.com/w3Rk32M1VT