செய்திகள் :

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்!

post image

ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்குமாறு ஆஸ்திரேலிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் குறிப்பாக தமிழர்கள் தைப்பொங்கல் கொண்டாடுவதைக் குறிப்பிட்ட அவர், ”சூரியன், நிலம், மழை, விவசாயம் போன்றவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் அறுவடை நாள்களாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் மூலம், நெறிமுறைகள், நிர்வாகம், மனித விழுமியங்களின் மதிப்பு குறித்து மக்களை சிந்திக்கத் தூண்டும் திருக்குறள் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களையும் இது அங்கீகரிக்க உதவும்.

மேலும், தமிழ் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுவது உள்ளூர் வர்த்தகர்களுக்கும் பயனளிக்கும்” என்று அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்

ஆண்ட்ரூ சார்ல்டன் முன்மொழிந்ததை வரவேற்ற பூர்வீக இலங்கைத் தமிழரான எம்பி மிச்செல் ஆனந்த ராஜா, “இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் தங்களின் பாரம்பரியத்தைக் கொண்டாட உதவும்” என்று கூறினார்.

இதன்படி, தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படும் எனக் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து தலைவர் கைது!

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்ன... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ்... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறியது ரஷியா

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இரு ஊா்களைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேறியுள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக... மேலும் பார்க்க

‘காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்’

காஸா போா் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பாா்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டா... மேலும் பார்க்க

யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்

ஆயிரக்கணக்கான அதிநவீன கருவிகள் மூலம் யுரேனியத்தை செறிவுபடுத்தும் நடவடிக்கையை ஈரான் விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்... மேலும் பார்க்க

பசியால் வாடிய பாலஸ்தீன மக்கள்..! உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவம்!

பசியால் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவத்தின் செயல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்... மேலும் பார்க்க