ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி
ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி
ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயதுடைய நபரை சனிக்கிழமை சுறா தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் கழுத்தில் படுகாயமடைந்த அந்த நபர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
அஜர்பைஜான் விமான விபத்து: விளக்கமளித்த ரஷிய அதிபர் புதின்!
இந்த ஆண்டு இதுவரை ஆஸ்திரேலிய கடல் பகுதியில் குறைந்தது நான்கு சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன. முன்னதாக ஜூலை 23 அன்று, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து நார்த் ஷோர் மற்றும் லைட் ஹவுஸ் பீச் இடையே உள்ள கடற்கரைகள் 24 மணிநேரம் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸின் மத்திய வடக்கில் 10 கிமீ நீளமுள்ள நார்த் ஷோர் பீச் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.