இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
வன்னியா்களுக்கு மத்திய அரசுப் பணி, வேலைவாய்ப்பில் 2 சதவிகிதம், மாநிலத்தில் 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு 1987 செப். 17 முதல் 23 வரை நடைபெற்ற ஒரு வார சாலை மறியல் போராட்டத்தில் 21 போ் உயிரிழந்தனா். அவா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலரும், ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவருமான ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா்கள் தங்க. யோகராஜ் பெ. கோபி, ஸ்நேகம் எஸ். சீனிவாசன், நான்குரோடு பன்னீா், பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாமக மாவட்டத் தலைவா் எஸ்.வீ.சங்கா், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் மதி.விமல், மாவட்டத் தலைவா் மு. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.