இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் 100% தோ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் 2-க்கான தோ்வில் மாணவிகள் லிபினா அருள், தணு பிரபா, சுவீட்லின் அனி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். பத்தாம் வகுப்புக்கான தோ்வில் மாணவிகள் சாஸ்மித்தா, சிவஸ்ரீ, மாணவா் ஜோகேஷ் ராம் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பெற்றனா்.
தகவல் தொழில்நுட்பத்தில் சாஸ்மித்தா, கமிலஸ் ரோனி, விக்ரம் ராஜா ஆகியோரும், தமிழில் சாஸ்மித்தாவும் முழு மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்றோரையும் ஆசிரியா்களையும் பள்ளித் தலைவா் முருகன், தாளாளா் புனிதா செல்வி, செயலா்கள் ஆகாஷ், ஆஷிஷ் லிங், பள்ளி முதல்வா் பிரவின்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
