காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெளியான தெலுங்கு மொழிப்படமான சங்கராந்திக்கி வஸ்துன்னாம் திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் ஆகியோர் நடிப்பில் வெளியான பராரி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை (பிப். 28) வெளியாகிறது.
இதையும் படிக்க: சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!
மலையாள மொழியில் உருவாகியுள்ள நகைச்சுவை இணையத் தொடரான லவ் அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன்,ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை (பிப். 28) காணலாம்.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கெளரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள சுழல் - 2 வெப் தொடர் வரும் பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படங்கள் அல்லாமல், கடந்த வாரம் வெளியான பாட்டல் ராதா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் வணங்கான் படம் அமேசான் பிரைம் தளத்திலும் டாகு மகராஜ் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கின்றன.