செய்திகள் :

இந்திய அணியுடன் இணைந்த பந்துவீச்சு பயிற்சியாளர்..! தீவிர பயிற்சியில் வீரர்கள்!

post image

துபையில் உள்ள இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இணைந்தார்.

கடந்த பிப்.18ஆம் தேதி தந்தை மறைவால் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தாயகம் திரும்பினார்.

பயிற்சியாளர் இல்லாமலே இந்தியா அணி 2 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டிய நால்வரும் நன்றாக பந்துவீசுவதால் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

துபைக்கு சென்றடைந்த மோர்னே மோர்கெல் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் நீண்ட நேரம் உரையாடினார்.

கில் தவிர மற்ற அனைவரும் பயிற்சி செய்தார்கள். ரிஷப் பந்த் உடல்நிலை குணமாகி பயிற்சிசெய்து வருகிறார்.

மார்ச்.2ஆம் தேதி நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவிருக்கிறது.

கடைசியாக இந்திய அணி 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

இந்தியாவிற்கான போட்டிகள் அனைத்தும் துபையில் மட்டுமே நடைபெறுகின்றன. சுழல் பந்துக்கு சாதகமாக உள்ள திடல் இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!

34 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2017இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு நுழையாமல் வெளியே செல்கிறது. ஃபகார் ஸமான்... மேலும் பார்க்க

தோல்வி எதிரொலி: கேப்டன் பொறுப்பு, ஒருநாள் போட்டிகளில் விலகும் ஜாஸ் பட்லர்?

சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் கேப்டன் பொறுப்பு குறித்து பட்லர் சிந்திப்பதாகக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேச போட்டி: டாஸ் சுண்டுவதில் தாமதம்! வெல்லும் முனைப்பில் மழை!

பாகிஸ்தான் - வங்கதேச போட்டிக்கான ராவல்பிண்டி மைதானத்தில் மழை பெய்துவருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, ... மேலும் பார்க்க

ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் ஆஸ்திரேய வீரர் டேவிட் பூனுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், ஐசிசி நடுவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெரிய மீசைக்கு பிரபலமானவரான 64 வயதான ட... மேலும் பார்க்க

ரஞ்சி இறுதிப் போட்டி: விதர்பா அணி 373 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 373 ரன்கள் குவித்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்க... மேலும் பார்க்க

கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் ச... மேலும் பார்க்க