செய்திகள் :

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

post image

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா குறித்து பேசிவந்தார்.

இப்போது என்ன ஆனதோ... ஏது ஆனதோ அந்தர்பல்டி அடித்து இந்தியாவிற்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருக்கும் ட்ரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசிக்கும், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களுக்கும் அதிக வரி விதிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். அதுவும் இதை அமெரிக்க விவசாயிகளுக்காகச் செய்வதாகக் கூறியுள்ளார்.

பல நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டிவிட்டது அமெரிக்கா. ஆனால், இன்னமும் இந்தியா மற்றும் கனடா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்தவொரு முடிவும் எட்டியபாடில்லை.

இந்த நிலையில் தான், ட்ரம்ப் வரி குறித்து பேசியுள்ளார்.

ட்ரம்ப் ஃபார்முலா

இதை இன்னொரு பக்கம் பார்த்தால், ட்ரம்ப் இதுகுறித்து பேசியிருக்கும் தருணம் மிக முக்கியமானது என்றும் கூறலாம். நாளை வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். இந்த சூழலில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

காரணம், அவர் ஒவ்வொரு நாட்டையும் வரியைக் காட்டிதான் மிரட்டி வருகிறார். அதே ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஃபாலோ செய்கிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அடுத்ததாக, இந்த வரியால் இந்தியா பாதிக்கப்படுமா... அமெரிக்கா பாதிக்கப்படுமா என்று பார்த்தால், அமெரிக்கா தான் பாதிக்கப்படும்.

காரணம், இந்தியா தனது மொத்த அரிசி ஏற்றுமதியில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே அமெரிக்காவிற்கு செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனது 25 சதவிகித பயன்பாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்கிறது.

இதனால், இந்த விஷயத்தில் ட்ரம்ப் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்' புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?

கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நி... மேலும் பார்க்க

``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும்" - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார்.புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொத... மேலும் பார்க்க

Amit Shah: "தயாராக இருங்கள் ஸ்டாலின்..!" - திமுகவுக்கு அமித் ஷா நேரடி சவால்

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டில் பீகாரைப் போலவே தோல்வியடையும் என சவால் விடுத்திருக்கிறா... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபரில் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிறகு வெளியில் பரப்புரை, சுற்றுப்பயணம், பிரசாரம் என எதையும் அவர் மேற்கொள்... மேலும் பார்க்க

`டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்!

சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ... மேலும் பார்க்க