செய்திகள் :

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்! -பாரதியாருக்கு பிரதமர் புகழாரம்

post image

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “தன்னிலமற்ற சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் பாரதியார்” என்று குறிப்பிட்டார்.

பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி. விசுவநாதனால் தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த தொகுப்புகள் பரமத்தி வேலூரைச் சேர்ந்த 81 வயதான சீனி. விசுவநாதன் கடந்த 64 ஆண்டுகளாக திரட்டியவையாகும்.

பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை வெளியிட்ட பிரதமர் பேசியதாவது, “நாட்டின் முக்கிய தேவைகளை மனதில் வைத்து தொலைநோக்குப் பார்வையுடன் உழைத்தவர் சுப்ரமணிய பாரதி. பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவர் ஓய்வின்றி பங்களிப்பு அளித்தவர்.

பாரதியாரின் புகழ் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியைக் கடந்தும் பரந்து விரிந்துள்ளது. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், தன்னுடைய வாழ்வை பாரதத் தாயின் தன்னிலமற்ற சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!

ஆந்திரத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்திரித்த கடன் செயலி முகவர்களால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திரப் பிரதேசத்தில் மீனவரான சுரேதா நரேந்திரா (21) என்பவரும் அகிலா தேவியும் (24) ஒன்றரை மாதத... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மையில் புது தொழில்நுட்பம், ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணியகத்தின்கீழ் செயல்படும் ‘கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மை... மேலும் பார்க்க

உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயன்!

பெண்கள் உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் 6ஜி திட்டம் விரைவில்! தகவல்தொடர்பு அமைச்சகம் தகவல்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 6ஜி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லில் 6ஜி திட்டம் ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக்கு தலைமை? - எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மமதா!

இந்தியா கூட்டணியின் தலைவராகத் தகுதி உடையவர் என கூறிய தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்ற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் வீணாகும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் பணம்!!

மக்களவையில் இரண்டு பில்லியனர்கள் குறித்த பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். பில்லியனர்கள் கௌதம் அதானி, ஜார்ஜ் சொரோஸ் இருவர் குறித்த பிரச்னைகள் மட்டுமே மக்களவையில் விவ... மேலும் பார்க்க