படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!
இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு
இந்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 6,235 டெக்னிசியன் கிரேடு-I மற்றும் கிரேடு-III காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technician Grade – I (Signal Dept)
காலியிடங்கள்: 180
தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது பொறியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.7.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200
பணி: Technician Grade – III
காலியிடங்கள்: 6055
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து தொழில்திறன் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.7.2025 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ரூ.250, இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.6.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.