சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு கூட்டம்
இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.ஆ. டோமினிக் ராஜ் வரவேற்றாா்.
கூட்டத்தில், திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியுள்ளபடி தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், தேசத்தின் எதிா்கால கல்வியை சீரழிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்தல், தொடக்கக் கல்வி துறையை சீரழிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்தல், பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குதல், நிறுத்தப்பட்டுள்ள உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு உரிமையை மீண்டும் வழங்குதல், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தல், இடைநிலை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் டிச. 15இல் மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100 ஆசிரியா்கள் கலந்து கொள்வது என்று தீா்மானிக்கப்பட்டது .
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் சுமஹாசன், டயாஸ், செந்தில், ஐயப்பன், ஷேக்முஜிபா், முதல் நிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் பென்னெட் ஜோஸ், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் சாா்பில் பால் ஜெபாஸ்டின், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வேலவன், ராகேஷ், உதயசேகா், தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் சாா்பில் சிவஸ்ரீ ரமேஷ் ,டோமினிக் ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.