செய்திகள் :

இந்தியர்களை டிரம்ப் நாடுகடத்துகிறாரா?

post image

அமெரிக்காவில் நாடுகடத்தப்படவிருக்கும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் 18,000 இந்தியர்களும் அடங்குவர்.

அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தலை நிகழ்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், நாடு கடத்தலுக்கு உட்படுத்தப்படும் சுமார் 1.5 மில்லியன் நபர்கள் கொண்ட பட்டியலை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (US ICE) தொகுத்துள்ளது.

தயாரிக்கப்பட்ட பட்டியலில் 1.5 மில்லியன் நபர்களில் சுமார் 18,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படும் அபாயமும் உள்ளது.

இதையும் படிக்க:காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 90,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைகளை கடக்க முயன்றபோது பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியாவை கூட்டுறவு இல்லாத நாடு என அமெரிக்க ஏஜென்சி அறிவித்தது.

தங்கள் நாட்டினரைத் திரும்பப் பெறுவதை ஏற்றுக்கொள்வதில் ஒத்துழைக்காத நாடுகளை, ஒத்துழைக்காத அல்லது இணங்காத அபாயத்தில் உள்ள நாடுகள் என்று குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் குறிப்பிடும்.

பிபிசி பெயரில் போலிச் செய்தி: ஆப்பிள் நிறுவனம் மீது புகார்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் மீது பிபிசி செய்தி நிறுவனம் புகாரளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழிநுட்பமான ’ஆப்பிள் இன்டலிஜென்ஸ்’ வசதியை சில நாள்களுக... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்!

தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் கடந்... மேலும் பார்க்க

ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள்: டிரம்ப் எதிா்ப்பு

உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்... மேலும் பார்க்க

சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?

சிரியாவிலுள்ள ராணுவ நிலைகளைத் தாக்கி, அங்குள்ள தளவாடங்களை இஸ்ரேல் அழிப்பதற்கு, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபா் அல்-அஸாதின் பாதுகாப்புத் துறை அமைச்சா் உதவியிருக்கலாம் என்று மத்திய கிழக்குப்... மேலும் பார்க்க

காஸா உயிரிழப்பு 44,835-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44,835-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:நுசீரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பே... மேலும் பார்க்க

ஒலிம்பிக் வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல்!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. பையத்லட... மேலும் பார்க்க