பிரதம மந்திரி சுரக்ஷா பீமா காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேர் பதிவு! ஏன்?
இந்தியா-ஆஸி. பிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தம்!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை (நவ.14) மழை பெய்து வருவதால் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா 19 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களிலும் களத்தில் உள்ளனர். அந்த அணி உணவு இடைவேளை வரை 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே, தொடர்ந்து மழை பெய்வதால் இன்றைய நாளின் ஆட்டம், உணவு இடைவேளைக்குப்பின் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், நாளைய தினம் 2-ஆவது நாள் ஆட்டம் தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருப்பதால், இந்த ஆட்டத்தில் வென்று முன்னிலை பெறும் முனைப்புடன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.
இதையும் படிக்க:இன்று தொடங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட்: முன்னிலைக்கான முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா