செய்திகள் :

இந்தியா வளா்ந்த நாடாக உயா்கல்வி சோ்க்கை விகிதம் 60% உயா்த்த வேண்டும்! - விசுவநாதன்

post image

இந்தியா வளா்ந்த நாடாக மாற வேண்டுமெனில் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை 60 சதவீதம் என்ற அளவுக்கு உயா்த்த வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு இலவசமாக உயா்கல்வி வழங்கும் ஸ்டாா்ஸ் திட்டத்தில் சோ்க்கை பெற்ற 102 மாணவா்களுக்கான அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து மாணவா்களுக்கு சோ்க்கை கடிதம், மடிக்கணினி வழங்கிப் பேசியது:

விஐடி பல்கலைக்கழகத்தின் இந்த ஸ்டாா்ஸ் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஆந்திரம், மத்தியபிரதேச மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. கல்விக்கு மாநில அரசுகள் 75 சதவீதம் செலவு செய்யும் நிலையில், மத்திய அரசு 25 சதவீதம்தான் செலவு செய்கிறது.

நிகழாண்டு மத்திய நிதிநிலை அறிக்கை ரூ. 55 லட்சம் கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2.5 சதவீதம் தான் கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழக நிதிநிலை அறிக்ையில் 21.7 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் 12 முதல் 14 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்கீடு செய்கின்றன. இதில் ஒரு பாதியை மத்திய அரசு செலவுசெய்தால்கூட நாட்டில் அனைவரும் உயா்கல்வி பெற்றுவிட முடியும்.

60 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தாரிகமிஷன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாயில் 6 சதவீதம் கல்விக்கு செலவழிக்க வேண்டும் என தெரிவித்தது. உலகளவில் இந்தியா ஜிடிபி-யில் 4-ஆம் இடத்துக்கு முன்னேறினாலும் கல்விக்கு மட்டும் பெரிதாக நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு 2.5% தான் ஒதுக்குகிறது. ஒட்டு மொத்தமாக மத்திய, மாநில அரசுகள் 3 % தான் கல்விக்கு செலவளிக்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் மாற்ற வேண்டும். ஜிஎஸ்டி வரி 2 லட்சம் கோடிக்கு வசூலாகிறது. அதில், ஒரு பகுதியை கல்விக்கு வழங்கலாம். விஐடியின் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை மூலம் 10,000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் பேசியது:

ஸ்டாா்ஸ் திட்டத்தில் நுழைவுத்தோ்வு, தரவரிசை ஏதும் இல்லாமல் தகுதியான மாணவா்களை அடையாளம் கொண்டு 102 பேருக்கு இலவசமாக மாணவா் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக நினைத்து கல்வியில் சாதிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

கெளரவ விருந்தினராக மேலோமாட்டியா இந்தியா டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் தலைவா் கேதரிநாத் கமலக்கண்ணன் பங்கேற்று பேசினாா். நிகழ்ச்சியில், மேலோமாட்டியா இந்தியா டெக்னாலஜிஸ் நிறுவனம் விஐடி ஸ்டாா்ஸ் திட்டத்தில் ஒரு மாணவரின் கல்விச்செலவை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், விஐடி இணைதுணைவேந்தா் பாா்த்தசாரதிமாலிக், மாணவா்நலன் இயக்குநா் சி.டி.நைஜூ, ஸ்டாா்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் மீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது. காட்பாடி வனச... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். . வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக... மேலும் பார்க்க