செய்திகள் :

``இந்தியாவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு கடைசி இடம்..'' - சு.வெங்கடேசன் வேதனை

post image

"மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையானது, குப்பைகளை வீட்டுக்கு வீடு சேகரித்தல், குப்பைகளை வகைப்பிரித்தல், குப்பை மேடுகளை மறுசீரமைத்தல், நீர்நிலைகள், சந்தைகள், பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன் எம்.பி

இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடமான 40 வது இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை நகரத்தைப் பொருத்தவரையில் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்படுவது 37 சதவிகிதம், குப்பை வகைப்பிரித்தல் 26 சதவிகிதம், உருவாக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து கையாளும் திறன் வெறும் 4 சதவிகிதம், குப்பை மேடுகளை மறுசீரமைத்தல் 25 சதவிகிதம் என்கிற அடிப்படையில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

அதேநேரம் குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் தூய்மை எனும் பிரிவுகளில் 100 சதவிகிதம் பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையின்றி இருப்பதை 3 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதை வைத்து அறிய முடிகிறது. மாநில அளவிலும் கணக்கெடுக்கப்பட்ட 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543 -வது இடத்தையேப் பெற்றுள்ளது. இக்கணக்கெடுப்பின் நெறிமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மதுரை நகரத்தின் தூய்மை மிக மோசமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மதுரை மாநகராட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்திற்காக மக்கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த கருமுத்து கண்ணன் தக்காராக இருந்தபோது நாட்டிலேயே சிறந்த முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் கோயிலாக மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டது.

மதுரை மாநகராட்சி

பல லட்சம் பேர் வந்து செல்கிற கோயிலை அவ்வளவு தூய்மையாக நிர்வகிக்க முடிந்தபோது மதுரை நகரைத் தூய்மையாக நிர்வகிப்பது கடினமல்ல. அதற்கான நிர்வாகத் திறனும், நோக்கத்தின் நேர்மையும் மிக முக்கியமானது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரத்தை உளப்பூர்வமாக நேசித்து பணியாற்றும் உள்ளமும், திறனும் முக்கியமானது. இந்த புள்ளிவிபரம் வெளிவந்த பின்னணியிலாவது மதுரை மாநகராட்சி விழிப்புற்று செயல்பட வேண்டும்.

தங்களின் நடைமுறைகளை சுயபரிசோதனை செய்து கொண்டு உரிய நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். நகராட்சித்துறை அமைச்சர் முன்னிலையில், மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். இப்பிரச்னையை விவாதிக்க மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தூய்மையான நகரமே மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்ற புரிதலோடு மதுரைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி குப்பை மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றின் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட வேண்டும்.

மதுரை மாநகராட்சி

மதுரையின் தூய்மை பணி பராமரிப்பு தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது குறித்தும், அதன் செயல்திறன் மற்றும் தூய்மைப் பணியாளர் நிலை உள்ளிட்ட அனைத்தும் விவாதிக்கபபட்டு உரிய முடிவெடுக்கப்பட வேண்டும்.

மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் பங்கேற்கும் சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை பொறுப்பில் இருப்பவர்களுக்கே உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தின் தூய்மையைப் பேணிக் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

MODI -க்காக RSS -ஐ பகைத்துக்கொள்ளும் BJP ? | MK STALIN ADMK TVK VIJAY | Imperfect Show 19.7.2025

* போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி. * வரதட்சணை வழக்கு - கணவர் பூபாலன் கைது!* என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது காவல் துறைக்கே தெரியும் ... மேலும் பார்க்க

``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `கறார்' மெசேஜ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் பேசிய எடப்பாடி கூட்டணி ஆட்சிக்கெல... மேலும் பார்க்க

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

கோவை காந்திரபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.கோவை ப... மேலும் பார்க்க

``என் உயிருக்கு ஆபத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்'' - டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இஸ்லாம்பூர் டு ஈஷ்வர்பூர் - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த ... மேலும் பார்க்க

OPS: தடுமாறி நிற்கும் ஓபிஎஸ்? விஜய் பக்கமாக சாய்கிறாரா? - அடுத்தக்கட்ட மூவ் என்ன? | In Depth

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், ஒரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்டவர் என ஓ.பி.எஸ்ஸூக்கு எத்தனையோ வலுவான அடையாளங்கள் இருந்தாலும், இன்றைய தேதிக்கு அவர் அரசியலில் தன்... மேலும் பார்க்க