செய்திகள் :

‘இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன்’

post image

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

முரசொலி மாறனின் 21-ஆவது நினைவு நாளையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தில்லியில் திமுகவுக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த முரசொலி மாறனின் நினைவு நாள். கருணாநிதி மீது கொண்ட தூய அன்பு, ஒப்பிலா அறிவுக்கூா்மை, மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

முரசொலி மாறனின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் தமிழகம் முழுவதும் திமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை தேடிவ... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான சேவை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏா் இந்தியா, இன்டிகோ உள்ளிட்... மேலும் பார்க்க

எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 7-ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் எச். ராஜா செய்தியா... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பை பாா்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சா்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தன்சிங் ராவத் பாா்வையிட்டாா். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30000-க்கும்... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் இன்று ஜானகி எம்ஜிஆா் நூற்றாண்டு விழா

அதிமுக சாா்பில் ஜானகி எம்ஜிஆா் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.24) நடைபெற உள்ளது. தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சாா்பில் வானகரத்த... மேலும் பார்க்க