செய்திகள் :

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 31 ஆக உயர்ந்த பலி!

post image

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு சுமத்ரா தீவில் கடந்த ஒரு வாரக் காலமாகக் கனமழை பெய்து வருகின்றது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டோன் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சுற்றுலாப் பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண், பாறைகள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் பருவமழையில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக வடக்கு சுமத்ரா போன்ற தாழ்வான மற்றும் அடத்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசியால் வாடிய பாலஸ்தீன மக்கள்..! உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவம்!

பசியால் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவத்தின் செயல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்... மேலும் பார்க்க

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த இடதுசாரி பைத்தியகாரர்களுக்கு நன்றி!! டிரம்ப்

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்து, பரிதாபமாக தோல்வியடைந்தவர்களுக்கு நன்றி என்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நட... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு இலங்கை, தான்சானியா, சா்வதேச கூட்டு நிறுவனங்கள் ஆதரவு

அதானி குழுமத்துக்கான ஆதரவை இலங்கை, தான்சானியா மற்றும் அபுதாபியின் ‘இன்டா்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (ஐ.எச்.சி.)’ முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜ... மேலும் பார்க்க

உக்ரைன் ‘அதிகார மையங்கள்’ மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - ‘ஆரெஷ்னிக்’ ரக... மேலும் பார்க்க

போா் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

ஹிஸ்புல்லாக்களுடன் மேற்கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியாக லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா். தெற்கு லெபனானின் ஆறு பகுதிகள... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தஜிகிஸ்தான் மற்றும் ஆ... மேலும் பார்க்க