செய்திகள் :

`இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

post image

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் இன்சூரன்ஸ், எப்.சி காலாவதியான நிலையில் ஓடிக்கொண்டிருந்ததாக, வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில்
சம்பவம் நடந்த இடத்தில்

மதுரை சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத், மனைவி சத்தியா, 2 வயது குழந்தை அஸ்வினுடன் அனஞ்சியூர் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சோனேஸ்வரி என்ற உறவினரையும் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அனஞ்சியூர் விலக்கு பகுதியில் பிரசாத் குடும்பத்தினர் டூ வீலரில் வந்துகொண்டிருந்த அப்போத எதிரே வந்த போலீஸ் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 3 பேரும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சோனைஈஸ்வரி மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

உயிரிழப்பை ஏற்படுத்தியது போலீஸ் வாகனம் என்பதால் கோபமடைந்த மக்கள் சம்பவ இடத்திலேயே போராட்டம் நடத்தினார்கள். வாகனத்தில் வந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் செய்த மக்களை சிவகங்கை எஸ்.பி சமாதனப்படுத்தினார்.

போலீஸ் வாகனம்
போலீஸ் வாகனம்

இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்ட நிலையில் மதுரையிலும் மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ 1 லட்சம் என நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து போலீஸ் வாகன டிரைவர் பாலமுருகன் மீது சிவகங்கை மாவட்ட காவல்துறை மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் TN23 G 0787 கடந்த 31-5-2010 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் இயக்கத் தகுதி நாள் கடந்த 30-5-2025 அன்றுடன் நிறைவடைந்து அதைக் கடந்து இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், வாகன இன்ஷூரன்ஸ் கடந்த 11-2-2018 அன்றுடன் நிறைவடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற தகுதியற்ற அரசு வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், இல்லையென்றால் இதுபோல கட்டுப்பாட்டை இழந்து அதிகளவு அப்பாவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?

சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடி... மேலும் பார்க்க

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு... மேலும் பார்க்க

ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்... மேலும் பார்க்க

பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமை; 90 வழக்குகளில் 3ல் தான் தண்டனை - அதிர்ச்சி தரும் எவிடென்ஸ் ஆய்வு

"தமிழ்நாட்டில் 7,500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரனையில் உள்ளது. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டத்தில் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள மதுரை 'எவிடென்ஸ... மேலும் பார்க்க

'உன் மீதே போக்சோ வழக்கு கொடுப்பேன்' தந்தையை மிரட்டிய 17 வயது மகள் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட மேற்கு நெய்யூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு மனைவி, 17 வயதில் ஒரு மகள் மற்றும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பிளஸ் ... மேலும் பார்க்க