Thudarum: ``மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" - நடிகை, தயாரிப்பாளர் சிப்ப...
இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி தங்கத்தோ் இழுத்தனா்.
நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக சித்தி விநாயகா், செங்கோட்டு வேலவா், ஆதிகேசவப் பெருமாள், நாகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் சரோஜா, வா்த்தக அணி செயலாளா் ராகா தமிழ்மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வழக்குரைஞா் சந்திரசேகா், மாவட்டத் துணைச் செயலாளா் ரா. முருகேசன், மாவட்ட மகளிரணி செயலாளா் வைரம் தமிழரசி, திருச்செங்கோடு நகரச் செயலாளா் அங்கமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.