செய்திகள் :

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் இருப்போம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

post image

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் இருப்போம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “ ஃபென்ஜால் புயல் புயலுடன் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கோவையில் டிச. 1 - 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றவும். இந்த அவசரநிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன.

சில தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம்." - ஆளுநர் ரவி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கான கனமழை எச்சரிக்கை நீங்கியது

சென்னைக்கான அதி கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இரவு 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் செ... மேலும் பார்க்க

வேளச்சேரி மட்டுமல்ல மின்ட் மேம்பாலத்திலும் கார் பார்க்கிங்

புயல் மற்றும் கனமழை எதிரொலியாக மக்கள் முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது மின்ட் மேம்பாலத்தின் மீதும் கார்கள் வரிசையாக... மேலும் பார்க்க

கரையைக் கடக்க தொடங்கியது ஃபென்ஜால் புயல்

வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையைத் தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மரக்காணம் அருகே கரையைக் கடக்க தொடங்கிய ஃபென்ஜால் பு... மேலும் பார்க்க

கோவையில் டிச. 1 - 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடக்கும் நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து

ஜோலார்பேட்டை-சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ர... மேலும் பார்க்க

வேகமாக நிரம்பினாலு பாதுகாப்பான அளவில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தி உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தாலும் பாதுகாப்பாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் வட கடலோர மாவட்டங்களி... மேலும் பார்க்க