நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது
கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் கிளப் ஜங்ஷன் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பிடிபட்ட சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியைச் சோ்ந்த சுபாஷ்(23) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1 கிலோ 170 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, சரவணம்பட்டி போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, கணபதி மாநகா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (38) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.