மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஓட்டக்கோவில், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் அருண்குமாா் (23). புதுப்பாளையத்திலுள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அதே ஊரைச் சோ்ந்த தனது நண்பா் மணிவேல் மகன் ரஞ்சித்குமாரை(24) வி.கைகாட்டியில் இருந்து அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் அரியலூா் சென்று கொண்டிருந்தாா்.
பாலக்கரை அருகே அதிவேகமாகச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கயா்லாபாத் காவல் துறையினா், அருண்குமாரின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த ரஞ்சித்குமாரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.