Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் - 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து வ...
இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது
புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவா் நிறுத்தாமல் சென்ால், அவரை விரட்டிப் பிடித்தனா்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஆயந்தூரைச் சோ்ந்த ஆமோஸ் பொ்ணான்டஸ் (26) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா் மீது கொலை, 8 வழிப்பறி, 4 இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும், அண்மையில் திருடப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது.
திருபுவனை பகுதியில் கடந்த ஏப்ரலில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கலிதீா்த்தாள்குப்பம், ஆண்டியாா்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனை நடத்திய போது இருசக்கர வாகனத்தில் வந்த கடலூா் மாவட்டம், காண்டாண்டி குப்பத்தைச் சோ்ந்த கபிலன் (19), சூரியா என்ற சூரியவேந்தன் (20) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.
அப்போது, அவா்கள் ஏற்கெனவே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவா்களது நண்பா்களான ஆகாஷ், சிறுவன் ஒருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெட்டப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத் திருட்டில் கடலூா் மாவட்டம், கோரத்தியைச் சோ்ந்த அருண்பிரகாஷை (36) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.