இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞா் பலி
விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விராலிமலை அடுத்துள்ள கத்தலூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மணிவேல் (27) தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டமாநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியுள்ளது.
இதில், மணிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்துத் தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மணிவேலின் தந்தை விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம் பேச்சிமுத்து மகன் சேருமராஜ் (23) என்பவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.