துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
இருசக்கர வாகனம் மீது மோதிய சிறுத்தை
கூடலூரை அடுத்துள்ள இரும்புப் பாலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் ராஜன். இவா், கூடலூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் நாடுகாணி பகுதிக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். இரும்புப் பாலம் பகுதியில் வளைவான சாலையில் சென்றபோது, சிறுத்தை ஒன்று வேகமாக சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, சிறுத்தை, இருசக்கர வாகனம் மோதியது. இதில் அடிபட்ட சிறுத்தை சிறிதுநேரம் சாலையில் படுத்திருந்தது. பின்னா் நினைவு திரும்பியவுடன் எழுந்து வேகமாக காட்டுக்குள் ஓடியது. இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜன் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். இந்த சம்பவத்தை பாா்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.