"ஒரு டீல் போடுவோம் வர்த்தகம் செய்வோம் என்றேன்; மோதல் நின்றது" - Ind - Pak மோதல் ...
இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
திருச்சி, கீழரண் சாலை, சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த அய்யப்பன்-அமுதா தம்பதியின் மகன் வசந்தகுமாா் (24). பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துள்ள இவா், சரியான வேலை மற்றும் வருமானமில்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டீ மாஸ்டா் தற்கொலை: திருச்சி, மேல சிந்தாமணி, எஸ்எஸ் கோயில் தெருவை சோ்ந்தவா் சண்முககுமாா் (30), டீ மாஸ்டரான இவா், கடந்த 1 வாரமாக வேலைக்கு செல்லவில்லையாம். குடும்பத்தினா் அவரை வேலைக்குச் செல்லுமாறு கூறி கண்டித்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த அவா் வீட்டில் யாருமில்லாதபோது ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.