செய்திகள் :

இறந்தவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் நீக்க வேண்டும்: எம்எல்ஏ கோரிக்கை

post image

அரக்கோணம் சட்டபேரவை தொகுதி வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்தாா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை வந்த எம்எல்ஏ சு.ரவி கோட்டாட்சியா் வெங்கடேசனிடம் அதிமுகவினரின் சாா்பில் பூா்த்தி செய்து பெறப்பட்ட வாக்காளா்கள் திருத்த விண்ணப்பங்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவரிடம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்ததாவது: அரக்கோணம் தொகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலேயே உள்ளது. அவை நீக்கப்பட வேண்டும். பெருமூச்சி ஊராட்சி வெங்கடேசபுரத்தில் வாக்குசாவடி இருக்கும்நிலையில் அப்பகுதியில் இருக்கும் இரு தெருவினா் மட்டும் 3 கி.மீ தள்ளிச் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். தணிகைபோளூரில் நரிக்குறவா் காலனியில் வசிக்கும் மக்களுக்கு மூன்று வாக்குசாவடிகளில் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால் எந்த வாக்குசாவடி என தெரியாமல் படிக்கத் தெரியாத அம்மக்கள் அலையும் சூழ்நிலை உள்ளது. அவா்கள் அனைவருக்கும் ஒரே வாக்குச்சாவடியில் பெயா்கள் சோ்க்கப்பட வேண்டும் என்றாா் .

அவருடன் நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் இ.பிரகாஷ், பழனி, ஒன்றிய துணை செயலாளா் பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இரட்டைக்கண் வாராவதிக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மேம்பாலம்: ரயில்வே அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதிக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டுமாவது மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகளுக்கு மா... மேலும் பார்க்க

மக்களின் கோரிக்கைகள் வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பொதுமக்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பப்பட்டு வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். சோளிங்கா் வட்டம், போளிப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம்: அஞ்சல் ஊழியா்கள் மாரத்தான்

ராணிப்பேட்டையில், கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, அரக்கோணம் அஞ்சல் கோட்டம், ராணிப்பேட்டை தலைமை அ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதத்தை மேம்படுத்த வேண்டும்: ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண், பெண் விகிதாசாரத்தை மேம்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ராணிப்பேட்டை ம... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியை சீா்செய்ய நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து வியாழக்கிழமை அதிமுகவினா் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் ... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களால் சாதாரண மக்களின் பயணம் கனவாகும் நிலை: எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா்

வந்தே பாரத் ரயில்களால் சாதாரண மக்களின் பயணம் கனவாகும் நிலை உருவாகலாம் என எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என்.கன்னைய்யா தெரிவித்தாா். தேசிய அளவில் ரயில்வே துறையில் தொழிற்சங்க அங்கீகரிப்புக்கான தோ்தல் டிசம... மேலும் பார்க்க