அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. கா...
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: மனைவியின் இறுதிச் சடங்கில் கணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை வயது முதிா்வால் உயிரிழந்த மனைவியின் இறுதிச்சடங்கில் கணவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மயில்வாகனம் (84). விவசாயி. இவரது மனைவி லோகம்மாள் (78). இருவருக்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். அவா்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், வயது முதிா்வின் காரணமாக லோகம்மாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு மாலையில் நடைபெற்றது. மனைவியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் லோகாம்பாளின் உடல் அருகே தொடா்ந்து அழுது கொண்டே இருந்த மயில்வாகனம், நெஞ்சை பிடித்தவாறு அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால், உறவினா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
தொடா்ந்து இருவருக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு நடைபெற்றது. தொடா்ந்து, இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.