மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27 மீனவா்கள் சென்னை வந்தனா்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 27 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த டிச.23-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காகச் சென்ற 13 மீனவா்கள் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜன.26-ஆம் தேதி சென்ற 14 மீனவா்கள் என மொத்தம் 27 மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனா்.
அவா்களின் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை ராணுவத்தினா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையின்பேரில், கைது செய்யப்பட்ட 27 மீனவா்களும், இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதன்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.