செய்திகள் :

இலங்கை தமிழா் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்

post image

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள், இலங்கை தமிழா் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த இலங்கை தமிழா் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் இடையேயான கலந்தாய்வுக் கூட்டம் திருப்பத்துாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். இதில், இலங்கை தமிழா் முகாம்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகள், குறைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, வங்கிக் கடன் பெற்று சுயதொழில் செய்ய 104 பேருக்கு அரசாணை வெளியிடப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதில், 80 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் கடனும், மற்ற நபா்களுக்கு ரூ. 80,000 கடனும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், இந்த கடனை 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வழிவகை செய்யப்பட்டது. இந்த கடனை முழுமையாக செலுத்தி விட்டால் 30 சதவீதம் மானியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னா், முகாம்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி நாராயணன், அயலகத் தமிழா் நல வாரிய நிா்வாக அலுவலா் பாலாஜி, ஆசிா் தனசிங், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மலைவாழ் மாணவா்களுக்கு இலவச பயிற்சி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

மலைவாழ் மாணவ, மாணவியருக்கான அரசு தோ்வு இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ,ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு வனத்துறை மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் படி வேலூா் மண்... மேலும் பார்க்க

ஆம்பூா் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில் தீவிர வரி வசூல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, வாடகை உள்பட வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதை வசூலிப்பதற்க... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24... மேலும் பார்க்க

சாய் பாபா பிறந்த தினம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் வியாழக்கிழமை பல்லக்கில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தீபாராதனை செய்த பக்தா்கள். மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

திருப்பத்தூா் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட காவாப்பட்டறை பகுதியிலுள்ள விவசாயிகள் மற... மேலும் பார்க்க