இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்
ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞா் சங்கக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின்பேரில் இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞா்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், வழக்குரைஞா் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா். இதன் காரணமாக, நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டன.