செய்திகள் :

இளங்கோவன் மறைவு தாங்க முடியாத துயரம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

post image

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொதுவாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.

அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ராவை இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை. அவ்வாறு அவர் அன்பொழுகச் சொல்லும்போதெல்லாம் நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க என நானும் அவரிடம் சொல்வேன். அதற்கு அவர், நீங்கள் என்னிடம் ஒப்படைத்த மக்கள் பணியை ஏற்ற பிறகு இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று உற்சாகம் ததும்பக் கூறி என்னைச் சமாதானப்படுத்துவார்.

சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டுவார். அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குப் போகும் நிலையிலும் தனது துணைவியாரிடம், என்னைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை அறிந்து அவரை நான் சந்தித்தபோது, அவர் பேசும் நிலையில் இல்லை. இருந்தபோதும் அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை உணர்ந்தவனாகவே நான் இருந்தேன். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன். இந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட செய்தியும் அதனைத்தொடர்ந்து அவர் மறைவுற்றார் என்ற செய்தியும் வந்தடைந்தது. அவரது மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.

பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு

கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அறிக்கையில் கூறியிருந்தார்.

தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

டிச.18ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு!

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில்(பகல் 1 மணி நிலவரப்படி) 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அஞ்சலி!

சென்னை: மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள... மேலும் பார்க்க

5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல... மேலும் பார்க்க

முன்பெல்லாம் வெள்ள அபாயம்.. தற்போது செல்ஃபி அபாயம்! காவல்துறை எச்சரிக்கை

தாமிரபரணி என அழைக்கப்படும் தாமிரவருணி ஆற்றில் நின்று யாரும் செல்ஃபி எடுக்கவோ வேடிக்கை பார்க்கவோ வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.முன்பெல்லா... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

சென்னை: வரும் வாரத்தில் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது.தமி... மேலும் பார்க்க