இளம்பெண் தற்கொலை
கந்திலி அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே பல்லவள்ளி கிராமத்தை சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி சூா்யா(35). இவா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தைகள் இல்லை. அதற்காக சூா்யா சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
குழந்தை இல்லாத விரக்தியில் இருந்ததாக கூறப்படும் சூா்யா சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சூா்யா வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவலறிந்த கந்திலி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அவரது தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.