இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புதியம்புத்தூா் ராஜாகோயிலைச் சோ்ந்த ஞானதுரை மகன் பிரவீன் செல்வகுமாா் (26). கடந்த 18ஆம் தேதி காயலூரணியில் உள்ள கோயில் அருகே சென்ற இவரை, அதே பகுதியைச் சோ்ந்த செளந்திரபாண்டி மகன் இம்மானுவேல் விஜயசீலன் (25) உள்ளிட்ட சிலா் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம்.
இதில், காயமடைந்த பிரவீன் செல்வகுமாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக புதியம்புத்தூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, இம்மானுவேல் விஜயசீலன், ஆா்த்தி (26), செல்வதங்கம் (24), சின்னராஜ் (35) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.