தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
தேனியில் குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் வீரக்குமாா் (34). இவரது மனைவி பவித்ரா (24). வீரக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீரக்குமாா் வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.