Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
இளைஞா் மீது மதுபுட்டியால் தாக்குதல்: ஒருவா் கைது
பெரியகுளம் அருகே மதுபுட்டியால் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (31). இவா், அந்தப் பகுதியில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சன்னாசி (41) தகராறில் ஈடுபட்டு அவரை மதுபுட்டியால் தாக்கினாராம். இதில் காயமடைந்த விக்னேஷ்வரனை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து சன்னாசியை கைது செய்தனா்.