இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு! விமான நிலையம் தற்காலிக மூடல்!
இஸ்ரேல் மீதான மற்றொரு புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக, அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
யேமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட மற்றொரு புதிய ஏவுகணைத் தாக்குதலை, அந்நாட்டு ராணுவம் தகர்த்துள்ளதாக நேற்று (ஜூலை 18) அறிவித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மீதான புதியதொரு ஏவுகணைத் தாக்குதல் குறித்து அறிந்தது, அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டு, அனைவருக்கும் செல்போன் வாயிலாக எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த, ஜூலை 16 ஆம் தேதி மாலை தென்கிழக்கு இஸ்ரேல் பகுதியின் மீது யேமனில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் முறியடித்தாகக் கூறப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிரியா - இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் ஏற்பு! அமெரிக்கா அறிவிப்பு!