இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு
புதுவை அரசு சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரியாா் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதையொட்டி காமராஜா் சிலை வளாகத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அனைத்து கட்சியினா்...: புதுவை திமுக சாா்பில் பெரியாா் சிலைக்கு அக் கட்சியின் மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
புதுவை அதிமுக சாா்பில் அவைத் தலைவா் அன்பானந்தம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
புதுவை இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநில செயலா் அ.மு. சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனா். விசிக சாா்பில் முதன்மைச் செயலா் தேவ. பொழிலன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
திராவிடா் கழகம் சாா்பில் சிவ.வீரமணி தலைமையிலும், தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் வீர.மோகன், இளங்கோ ஆகியோா் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி புதிய நீதிக் கட்சி சாா்பில் மாநில அமைப்பாளா் செ.தேவநாதன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.