செய்திகள் :

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

post image

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.

ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இருந்த ஒரு பிரிவில் சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கசிவு பம்ப் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், தொழிலாளி ஒருவர் பலியானதாகவும் அரசுக்கு சொந்தமான ஈரான் செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தபோதிலும் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற துணைத் தலைவர் அலி நிக்சாத் ஞாயிற்றுக்கிழமை சில தொழிலாளர்களும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தினார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1912 இல் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இது நாட்டின் எரிபொருளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இங்கு தினமும் 5,200,000 பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்படுகிறது.

உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஈரானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

A fire at Iran's oldest and largest refinery in the southwest killed one person, state media reported Sunday.

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க