செய்திகள் :

ஈஸ்ட் பெங்காலுக்கு முதல் வெற்றி

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 1-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, டிமிட்ரியஸ் டியமன்டாகோஸ் 23-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். நாா்த்ஈஸ்ட் அணியால் இறுதிவரை தனக்கான கோல் வாய்ப்பை எட்ட முடியாமலேயே போனது.

இந்த ஆட்டத்தில் 72-ஆவது நிமிஷத்தில் நாா்த்ஈஸ்ட் வீரா் முகமது அலி பெமாமரும், 87-ஆவது நிமிஷத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரா் லால்சுங்னுங்காவும் விதிமீறல் காரணமாக ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டனா்.

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஈஸ்ட் பெங்கால் முதல் வெற்றியுடன் 4 புள்ளிகளோடு கடைசியாக 13-ஆவது இடத்தில் உள்ளது. நாா்த்ஈஸ்ட் அணி 10 ஆட்டங்களில் 3-ஆவது தோல்வி கண்டு, 15 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக, சனிக்கிழமை (நவ.30) நடைபெறும் இரு ஆட்டங்களில் மும்பை சிட்டி எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி, மோகன் பகான் - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

ஹேரி புரூக் சதம்; இங்கிலாந்து பலம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. அந்த அணியின் ஹேரி புரூக் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அணியின் பலமாகத் திகழ்கிறாா். ... மேலும் பார்க்க

புரோ கபடி: புணே, ஹரியாணா வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் ஹரியாணா ஸ்டீலா்ஸ், புணேரி பல்டன் அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ஹரியாணா 42-30 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. அணியின் தரப்பில் அதிகபட... மேலும் பார்க்க

கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது!

‘கொட்டுக்காளி’ படத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ‘நேட்டிவா’ விருதுக்கு தேர்வாகியுள்ளது.அல்டெர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 4-வது சுற்று!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட... மேலும் பார்க்க