செய்திகள் :

உ.பி: 185 வருட பழைமையான மசூதியின் ஒரு பகுதியை இடித்த மாவட்ட நிர்வாகம்; போலீஸார் குவிப்பு!

post image

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத கட்டுமானம் என்ற பெயரில் பெரும்பாலும் சிறுபான்மையினருக்கெதிராக நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதாவது, "அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது. இடிப்பு உத்தரவை மேல்முறையீடு செய்ய கட்டட உரிமையாளருக்கு வாய்ப்பு தர வேண்டும். 15 நாள்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். முறையான வழிகாட்டுதல்கள் மீறி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளே தங்களின் சொந்த செலவில் அதைச் சரி செய்ய வேண்டும்" என்பது உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

நூரி மசூதி

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் 185 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதியை உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்திருக்கின்றனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், சட்டவிரோத கட்டுமானம் காரணமாக மசூதியின் சில பகுதிகளை இடிப்பதாக ஆகஸ்ட் 17ஆம் தேதியே நோட்டீஸ் அனுப்பியதாகப் பொதுப்பணித்துறை கூற, மறுபக்கம் மசூதி நிர்வாகிகள், பொதுப்பணித்துறை ஒரு மாத காலம் அவகாசம் தருவதாக உறுதியளித்ததாகக் கூறுகிறது.

இடிப்பு குறித்து, லாலௌலி காவல் நிலையப் பொறுப்பு ஆய்வாளர் பிருந்தாவன் ராய் கூறும்போது, "பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் பாரப்பளவிலான பகுதி, செவ்வாயன்று அதிகாரிகள் முன்னிலையில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது." என்று ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அவினாஷ் திரிபாதி, "ஆக்கிரமிப்புகள் மற்றும் பிற சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற மசூதி நிர்வாகம் உட்பட 139 நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே, மசூதியுடன் இணைக்கப்பட்ட கடைகளை அகற்றியது. இப்போது அதன் ஒரு பகுதியை அகற்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இடிக்கப்பட்ட பகுதிகள், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது செயற்கைக்கோள் மற்றும் வரலாற்றுப் படங்கள் மூலம் தெளிவாகிறது. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி மட்டுமே அகற்றப்பட்டிருக்கிறது." என்று கூறியிருக்கிறார்.

நூரி மசூதி

மறுபக்கம், இதனை மறுத்த மசூதி நிர்வாகக் குழுவின் தலைவர் முகமது மொயின், ``லாலௌலியில் உள்ள நூரி மசூதி 1839-ல் கட்டப்பட்டது. ஆனால், 1956-ல் தான் இங்கு சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகளை பொதுப்பணித்துறை சட்டவிரோதமானது என்று கூறுகிறது." என்று தெரிவித்திருக்கிறார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், போலீஸ் மற்றும் விரைவு அதிரடிப் படை அதிகாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

``தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 17% குறைந்திருக்கிறது!'' - சி.ஏ.ஜி அறிக்கை

31-03-2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான நிதி அறிக்கை, வரவு செலவு திட்ட மேலாண்மை, கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சி.ஏ.ஜி (CAG) அறிக்கை ... மேலும் பார்க்க

Pan 2.0: `QR Code உள்ள புதிய பான் கார்டு' - எப்படி, எதில் விண்ணப்பிக்க வேண்டும்?

பான் 2.0 திட்டத்தின் படி, நமது பான் கார்டுகளில் QR CODE இடம்பெற உள்ளன. இது பான் கார்டு மூலம் நாம் பெற உள்ள சேவைகளை எளிதாக மாற்ற உள்ளது. அதனால், புதியதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு QR CODE உடன்... மேலும் பார்க்க

``எத்தனை காலத்துக்கு இலவசங்கள்? வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" -அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

2021, ஜூன் மாதம் கொரனோ கலகட்டத்தின்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், `மத்திய அரசு ஒரு போர்ட்டலை உருவாக்கி அதில் அன... மேலும் பார்க்க

திருச்சி: கட்டிமுடிக்கப்படாத சுரங்கப்பாதை; அச்சத்தில் பெண்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒரு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. முக்கியமாக கோவிலூர் மற்றும் நந்தவனம் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல இந்த ஒரு வழி மட்டுமே உ... மேலும் பார்க்க

விருதுநகர்: போதை இளைஞர்களைக் கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்; 4 பேர் கைது!

விருதுநகரில் ரோந்து சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர், மது போதையில் இருந்தவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீஸை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளன... மேலும் பார்க்க

Aadhav Arjuna: ``திமுக அழுத்தம் தந்தால்தான் நடவடிக்கை எடுத்தேனா...?'' - திருமாவளவன் விளக்கம்

சமீபத்தில் விஜய் பங்கேற்ற விகடனின் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது தமிழக அரசியலிலும், 'தி.மு.க - வி.சி.க' கட்சியினரிடையே பெரும் விவாவத்தைக் கிளப்பிவி... மேலும் பார்க்க